குறிப்பு: நண்பர்களே, நாம் இங்கு வழங்கும் விடயங்கள் மற்றும் நிரலிகள் அனைத்தும் கல்வி நோக்கத்திற்காகவே. தகவல் திருட்டு ஒரு பாரிய குற்றம். சிந்தித்து செயற்படுங்கள்.

ஹக்கிங் மற்றும் ஹக்கர்ஸ் ஓர் அறிமுகம்

இந்த தளத்தில் ஹக்கிங் பற்றி நான் அறிந்தவற்றை எழுதப்போகிறேன். முக்கியமாக ஹக்கிங், கொந்தர்கள் (ஹக்கேர்ஸ்), ஹக்கிங் வழிமுறைகளும் அவற்றை தடுப்பதற்கான வழிவகைகள் என இன்னும் பல விடயங்களுடன் இத்தொடர் நீண்டு செல்லப்போகின்றது. அதன் முதல் கட்டமாக கொந்தர்கள் (ஹக்கேர்ஸ்), ஹக்கிங் பற்றி அடிப்படை தகவலை கீழே தந்திருக்கிறேன். படித்து முடித்த பின்னர் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் கருத்துக்களை கூறுங்கள்...
ஹக்கிங் ஓர் அறிமுகம்.
ஹக்கிங் என்பதை இதுதான் ஹக்கிங் என்று வரையறுத்துக் கூற முடியாது. பொதுவாக அனுமதியில்லாமல் நடைபெறும் தரவு கையாடல் அல்லது தரவு திருட்டு ஹக்கிங் என்று கூறலாம். ஹக்கிங்கில் பல வகைகள் காணப்படுகிறது. உதாரணமாக இணையத்தள திருட்டு, மென்பொருள் திருட்டு, வலையமைப்பு திருட்டு என்று பல வகைகள் இருந்தாலும் அனைத்திற்கும் பொதுவான காரணம் தரவு அல்லது தகவல் திருடுவது தான். சில நேரங்களில் பழிவாங்கும் நோக்கங்களுடனும் பதிலடி கொடுப்பதற்காகவும் கூட ஹக்கிங் செய்யப்படுகிறது. ஒரு சிலர் பொழுது போக்காகவும் இதனை செய்வார்கள். உதாரணத்திற்கு ஜெயா தொலைக்காட்சி, அஇஅதிமுக இணையத்தளங்களை முடக்கிய ஹக்கர்களிடம் கேட்டதற்கு அவர்கள் சும்மா பொழுது போக்கா தான் இவற்றை ஹக் செய்ததாக  கூறினார்கள். இது தெரியாம தான் ஈஸ்வரன் என்று ஒருத்தரை கைது பண்ணியிருக்காங்க நம்ம இந்தியன் போலிஸ்காரர்ஸ். அது பற்றி இறுதியில் கூறுகிறேன். ஹக்கிங் பற்றி இந்த அடிப்படை போதும் என்று நினைக்கின்றேன். இனி ஹக்கர்ஸ் பற்றி பார்க்கலாம். 
கொந்தர்கள் (ஹக்கேர்ஸ்) ஓர் அறிமுகம்  
இணைய உலகின் கதாநாயகர்களும் இவர்கள் தான் வில்லன்களும் இவர்கள் தான். இவர்கள் இல்லாமல் இணைய உலகின் பாதுகாப்பு இந்தளவுக்கு உயர்ந்திருக்காது. நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு பைரேட்(Pirate) மென்பொருட்களும் ஒரு ஹக்கரின் அல்லது ஒரு ஹக்கர் குழுவின் உழைப்பில் வெளியிடப்பட்டவையே. இவர்களில் பல வகையினர் இருந்தாலும் இன்றைய தொழில்நுட்ப சமூகம் இவர்களை இவர்களின் செயற்பாடுகள், நோக்கம் என்பவற்றின் அடிப்படையில் WHITE HAT HACKER, GREY HAT HACKER, BLACK HAT HACKERS என்று மூன்று வகைப்படுத்திப்பார்க்கிறது. இந்த மூன்று வகையினரைப்பற்றியும் தொடர்ந்து பார்ப்போம். 
 WHITE HAT HACKERS 
இணைய உலகின் கதாநாயகர்கள் இவர்கள் தான் எப்போதும் தங்கள் அறிவை நல்ல விதத்தில் மட்டுமே பயன்படுத்துபவர்கள். இவர்கள் தொழில்நுட்ப உலகில் உங்களுக்கு ஏற்படும் ஆபத்துக்களில் இருந்து உங்களை பாதுகாப்பதற்காக தங்களை அர்பணித்துக்கொண்டவர்கள். இவர்களை தொழில்நுட்ப உலகின் போராளிகள் என்று கூறினால் கூட மிகையாகாது. தினம் தினம் புதிது புதிதாக கிளம்பும் நச்சு நிரல்களின் தாக்குதல்களில் இருந்து எம்மை பாதுகாப்பதற்காக போராடுபவர்கள். அதனால் தான் இவர்களை போராளிகள் என்று கூறினேன். பெரும்பாலும் பெரிய பெரிய anti virus software கம்பனிகளில் வேலை பார்ப்பவர்கள். இவர்களின் உதவியால் தான் இன்று எமக்கு நச்சு நிரல் தடுப்பிகள் கிடைக்கின்றன. நீங்களும் ஒரு WHITE HAT HACKER ஆகலாம். அதற்கான உதவியை eccouncil.org தளம் வழங்குகின்றது. மேலதிக தகவல்களுக்கு இங்கே சொடுக்குங்கள்.
 GREY HAT HACKER
இவர்கள் அந்நியன் படத்தில் வருகின்ற விக்ரம் மாதிரியானவர்கள். நல்லவர்களா தான் இருப்பார்கள் திடீர் என்று கெட்டவர்களாக மாறிவிடுவார்கள். மேலே சொன்னது போல பொழுதுபோக்காக ஹக்கிங் செய்பவர்கள் இவர்கள் தான். காலையில் பள்ளி, கல்லூரி, அலுவலகம் இரவில் ஹக்கிங். இதனால் இவர்கள் ஆபத்துக் குறைந்தவர்கள் என்று நீங்கள் கருதினால் அதற்கு நான் பொறுப்பில்லை. திடீர் தாக்குதல்களால் நிலைகுலையைச் செய்யக்கூடியவர்கள். இவர்களை விட பயங்கரமானவர்களைப் பற்றி தான் அடுத்ததாக பார்க்க போகிறோம். மேலதிக தகவல் - இவர்கள் பெரும்பாலும் பணத்தை எதிர்ப்பார்த்து ஹக் செய்வதில்லை. என் நண்பர்கள் வட்டத்தில் பலர் இந்த வகையினர் தான் :)
 BLACK HAT HACKERS
 WHITE HAT HACKERS இணைய உலகின் கதாநாயகர்கள் எனில் இவர்கள் தான் அவர்களுக்கு அவர்களுக்கு வில்லன்கள். WHITE HAT HACKERS எட்டு அடி பாய்ந்தால் இவர்கள் பதினாறு அடி பாய்வார்கள். WHITE HAT HACKERS க்கு தலைவலியே இவர்கள் தான். இவர்களுக்கு இருக்கும் அறிவினை நல்லவற்றிற்கு பயன்படுத்துவது என்பது அத்தி பூத்தாற் போல் தான் எப்போதாவது ஒரு மூட் வந்தால் மட்டும் பயன்படுத்துவார்கள். நூறில் என்பது வீதமான ஹக்கிங் இவர்களாலேயே செய்யப்படுகிறது. சில வேளைகளில் குழுவாக இணைந்தும் தாக்குதல் நடத்துவார்கள். இவர்களின் முக்கிய நோக்கம் ஹக்கிங் மூலம் பணத்தை சம்பாதிப்பதே. இதற்காக இவர்கள் பெரிய நிறுவங்களின் இணையத்தளங்களை ஊடுருவி அதில் இருக்கும் தரவுகளை திருடி அதன் மூலம் அவர்களிடமிருந்து சில இலட்சங்கள் முதல் கோடிகள் வரை அபகரிப்பதே. சிலர் அந்த தரவுகளை வெளியிட்டு அந்த நிறுவனத்திற்கு நட்டத்தையும் விளைவிப்பார்கள். சில நிறுவனங்கள் தமது போட்டி நிறுவனத்திற்கு நட்டத்தை விளைவிப்பதற்காகவே இது போன்ற BLACK HAT HACKER களை சம்பளம் கொடுத்து வேலையில் வைத்திருப்பார்கள்.  
இவர்களை தவிர வேறு சில ஹக்கர்களும் இருக்கிறார்கள். ஆனாலும் இந்த மூன்று வகையினரும் தான் மிக முக்கியமானவர்கள். அதனால் அவர்கள் யார் என்று தெரிந்து வைத்துக்கொள்வதற்காக மட்டும் அவர்களை குறிப்பிடுகிறேன்.
  • Script Kiddies
  • Intermediate Hackers
  • Hackers
  • Suicide Hackers
மேலே சொன்னது போல ஜெயா டிவி இணையத்தளத்தை முடக்கியது ஈஸ்வரன் கிடையாது. பாகிஸ்தான் ஹக்கர்ஸ் முடக்கிய தளத்தை திரும்ப மீட்க முயன்றவர் தான் ஈஸ்வரன் என்பது கூடுதல் தகவல். இந்த பதிவின் மூலம் உங்களுக்கு ஹக்கிங் மற்றும் ஹக்கர்ஸ் பற்றிய ஓர் அறிவு வந்திருக்கும் என்று நினைக்கின்றேன். ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். 

Post a Comment