குறிப்பு: நண்பர்களே, நாம் இங்கு வழங்கும் விடயங்கள் மற்றும் நிரலிகள் அனைத்தும் கல்வி நோக்கத்திற்காகவே. தகவல் திருட்டு ஒரு பாரிய குற்றம். சிந்தித்து செயற்படுங்கள்.

Dark Comet RAT மூலம் கணினியை ஹக் செய்வது எப்படி?

RAT என்றால் என்ன?
Remote Administration Tool / Remote Administration Trojan என்பதன் சுருக்கமே RAT எனப்படுகிறது. உங்கள் கணினியில் இருந்து இன்னொருவருடைய கணினியை கையாள்வதற்கு/கட்டுப்படுத்துவதற்கு  பயன்படுத்தப்படுகிறது. RAT இன் உதவியுடன் உங்களால் இன்னொருவருடைய கணினியை மட்டுமல்ல அதனுடன் தொடர்புபட்டிருக்கும் வெப்காம், மைக்ரோபோன் போன்றவற்றையும் கட்டுப்படுத்த முடியும் :)

Specifications of Dark Comet RAT :-
  • Keylogger
  • System Monitor (Process, Registry, Startup, DNS Manager, etc.), 
  • File manager (which is even more complete than an FTP-server), 
  • Surveillance (Micro-capture, Keylogger, Screen capture, Webcam capture, etc.), 
  • Network functions (Scan for local computers, monitor network activity, WIFI viewer, download files from web, etc.)
Dark Comet RAT இனை தரவிறக்க இங்கே சொடுக்குங்கள் :)
Password



பேஸ்புக்கில் சிங்கிள் நேம் வசதியை உபயோகிப்பது எப்படி?



நீண்ட நாட்களுக்கு பிறகு பதிவு எழுத நேரம் கிடைத்திருக்கிறது. நீண்ட நாட்களாக நண்பர்கள் பலர் கேட்ட விடயம்தான். முகநூலில்  எவ்வாறு கடைசி பெயரை விடுத்து முதல் பெயரை மட்டும் உபயோகிப்பது? அதாவது கடைசி பெயரை நீக்கிவிட்டு முதல் பெயருடன் மட்டும் முகநூல் கணக்கு வைத்திருத்தல்…

இது சாத்தியமா?  ஆம்

இந்த வேலையை செய்வதற்கு நான் பரிந்துரைக்கும் இணைய உலவி mozilla firefox(மொசில்லா பயர்பாக்ஸ்) இந்த மாதிரி வேலைகளிற்கு கூகுள் குரோம் போன்ற ஏனைய உலவிகளை விட  பயர்பாக்ஸ்ஸே சிறந்தது.

step-1

முதலில் இணைய உலவியின் Proxy செட்டிங்ஸை மாற்றம் செய்யுங்கள்.

கீழே தரப்பட்ட இந்தோனேசியன் புரொக்சி சேர்வர்களின் ஐபி அட்ரஸ்களில் விரும்பிய ஏதாவது ஒன்றை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

HTTP Proxy :-

  • 119.252.160.34
  • 202.43.188.143
  • 118.98.35.251 
  • 36.76.182.173
  • 61.247.45.35
  • 180.250.169.14
  • 180.250.82.188
  • 119.252.160.34
  • 219.83.100.195
  • 110.139.125.230
  • 202.87.254.156 

PORT :-             8080

இதனை மாற்றம் செய்வதற்கு,

உங்கள் பயர்பாக்ஸ் உலவியில் start page சென்று settings ஐகானை அழுத்துங்கள். உடனே options என்ற ஒரு pop-up வின்டோ தோன்றும்.

அதில் Advanced என்கிற பகுதியை தெரிவுசெய்துகொண்டு அங்குள்ள தெரிவுகளில் Network என்பதை தெரிவு செய்து settings என்பதில் கிளிக் செய்யுங்கள்.

பட உதவி
settingsஇல் கிளிக் செய்ததும் இப்போது connection settings என்கிற இன்னொரு pop-up வின்டோ வந்திருக்கும். அதிலே“Manual Proxy Configuration”என்பதை தெரிவு செய்து விட்டு மேலே தரப்பட்ட  புரொக்சி சேர்வர்களின் ஐ.பி அட்ரஸ்களில் விரும்பிய ஏதாவது ஒன்றை HTTP Proxy பகுதியில் ரைப் செய்து PORT பகுதியில் 8080 என்பதையும் ரைப் செய்து கொள்ளுங்கள்.

முக்கியமாக “Use this proxy server for all protocols”என்பதை ரிக் செய்துகொள்ளுங்கள்.

பட உதவி
இப்போ இந்த செட்டிங்ஸை save செய்துகொள்ளுங்கள்.

step-2

அப்படியே இனி உங்க பேஸ்புக் கணக்கின் Account Settings பகுதிக்கு சென்று “language”இனை  ”Bahasa Indonesia” என்பதாக மாற்றிக்கொள்ளுங்கள்.

பின்னர் “Name”  Edit பகுதிக்கு சென்று இலகுவாக உங்களின் லார்ஸ்ட் நேமை அழித்துவிட்டு பாஸ்வேர்டை ரைப் செய்து Save Changes என்பதை அழுத்துங்கள்….. அவ்வளவுதான்……. இனி நீங்கள் உங்களின் லார்ஸ்ட் நேம் தவிர்த்த உங்களின் தனிப்பெயருடன்(first name) பேஸ்புக்கில் உலாவரலாம்…..

NOTE-

1/ தேவையற்ற சில தடங்கல்களை தவிர்க்க, புரொக்சி செட்டிங்க்கை மாற்றம் செய்வதற்கு முன்பதாகவே உங்கள் பேஸ்புக் கணக்கினுள் லாக்-இன் ஆகுங்கள். ஏனெனில் சில சந்தர்ப்பங்களில் புரொக்சி மாற்றம் செய்த பின்னர் ஏதாவது error மெசேஜ் காட்டலாம்.

2/ இந்த வேர்க் முடிந்ததும் இணைய உலவியில் புரொக்சியை Remove செய்ய மறக்க வேண்டாம்.  அதாவது மீண்டும் “Use system proxy settings” என்பதற்கே இணைய உலவியின் செட்டிங்ஸை மாற்றுங்கள்.

அத்தோடு பேஸ்புக் கணக்கின்  ”language”இனையும் மீண்டும் நீங்கள் ஏற்கணவே பாவித்த மொழிக்கே மாற்றிவிடுங்கள்.

Note :- Facebook start blocking this Ip address for many countries and places. So i don’t guaranty about it, So please try it i hope its may work for your place.

இணையத்தில் அநாமதேயமாக உலாவுதல்

இணையத்தில் அநாமதேயமாக உலாவுதல் என்ற தலைப்பை பார்த்தவுடன் நீங்கள் குழம்பியிருப்பீர்கள். அது பற்றி முழுவதுமாக அறிய தொடர்ந்து படியுங்கள். நீங்கள் பயன்படுத்தும் கணினி ஒரு வலையமைப்பு அல்லது இணையத்துடன் இணைந்திருந்தால் சந்தேகமேயின்றி உங்களை யாராவது ஒருவர் கண்காணித்துக்கொண்டே தான் இருப்பார். கண்காணிப்பவர் தனி நபராக இருக்கலாம் அல்லது குழுவாக கூட இருக்கலாம். எப்படி உங்களை கண்காணிக்கிறார்கள் என்று அறிந்துகொள்ளுங்கள்.

உங்கள் வலையத்தின் தனித்தன்மை வாய்த்த IP முகவரி மூலமாகத்தான். நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு தளத்துக்கும் தனிதனி முகவரிகள் இருக்கிறது. நீங்கள் ஒரு தளத்தின் பெயரை கொடுக்கும் போது அந்த தளத்தின் முகவரியானது (எ.கா google.com) Domain Name System ன் உதவியால் தனித்தன்மை வாய்த்த எண் முறைக்கு மாற்றப்பட்டு[74.125.236.83] Serverக்கு Request செல்கிறது. Service Provider உங்களுடைய Request ஐ ஏற்று உங்களுக்கு அந்த தளத்தின் பக்கத்தை காட்டுகிறது. இந்த செயலை தான் Three Way HandShake என்பார்கள்.

நீங்கள் ஒவ்வொருமுறை தள முகவரியையோ அல்லது தொடர்பையோ சொடுக்கும்போது இவை நிகழ்கிறது. சில தளங்கள் வராமல் இருப்பதற்கான காரணம் server இடம் இருந்து பதில் வராததே.

இதில் நீங்கள் எப்படி கவனிக்கப்படுகிறீர்கள் என்றால் நீங்கள் request அனுப்பும் தளமானது உங்கள் IP Address ஐ சேமித்து வைத்துக்கொண்டு உங்கள் நடவடிக்கையும் தன்னிச்சையாக சேமிக்குமாறு நிரல் எழுதப்பட்டு இருக்கும்.

உதாரணமாக நாம் கூகுளில் தேடும் விசயங்களையும் Google ஆராய்ந்து பார்க்கும். நேற்று நீங்கள் புத்தகங்கள் பற்றி தேடலில் ஈடுபட்டு, இன்று ஒரு பிரபலத்தின் பெயரை தேட முயன்றால் அந்த பிரபலத்தை பற்றிய புத்தகங்களை உங்கள் தேடலில் காண்பிக்கும். இது தான் கண்காணிப்பது.

இவற்றை விட முக்கியமானது நீங்கள் ஒரு தளத்தை ஹக் செய்து விட்டீர்கள். அந்த மகிழ்ச்சியில் உங்கள் IP முகவரியை மறைக்க மறந்திருந்தால் அடுத்தநாள் சைபர் கிரைம் போலீசார் உங்கள் வீட்டுக் கதவைத்தட்டுவார்கள். ஆகவே ஹேக்கிங் பற்றி அறியும் முன் உங்கள் IP முகவரியை மறைக்க வேண்டியது கடமையாக இருக்கிறது. அதை கற்றுகொண்ட பிறகு மற்றவற்றை பார்க்கலாம்.

VPN -  Virtual Private Network இது உங்களுடைய முகவரியை மறைத்து புதிய முகவரியில் நீங்கள் இருப்பதாக உலகத்துக்கு காட்டும். இதற்காக நீங்கள் நிறைய சிந்திக்க வேண்டியதில்லை. இணையத்தில் இதற்கான வழிகள் நிறைய இருந்தாலும் இலகுவானதாக Hotspot Shield விளங்குகின்றது. இதனை உங்கள் கணினியில் நிறுவி RUN பண்ண விட்டாலே போதும். தரவிறக்க இங்கே சொடுக்குங்கள். 

தரவிறக்கிய பின் உங்கள் கணினியில் நிறுவுவதற்கு முன்  உங்கள் IP முகவரியை இங்கே சொடுக்கி அறிந்து கொள்ளுங்கள். நிறுவிய பின்னரும் உங்கள் IP முகவரியை பரிசோதித்துக் கொள்ள மறக்காதீர்கள்.

IP யை மறக்கும் கலையை கற்றுக்கொள்ளுங்கள். அடுத்த கட்டத்துக்கு போக தயாராய் இருங்கள்...  ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். 

ஹக்கிங் மற்றும் ஹக்கர்ஸ் ஓர் அறிமுகம்

இந்த தளத்தில் ஹக்கிங் பற்றி நான் அறிந்தவற்றை எழுதப்போகிறேன். முக்கியமாக ஹக்கிங், கொந்தர்கள் (ஹக்கேர்ஸ்), ஹக்கிங் வழிமுறைகளும் அவற்றை தடுப்பதற்கான வழிவகைகள் என இன்னும் பல விடயங்களுடன் இத்தொடர் நீண்டு செல்லப்போகின்றது. அதன் முதல் கட்டமாக கொந்தர்கள் (ஹக்கேர்ஸ்), ஹக்கிங் பற்றி அடிப்படை தகவலை கீழே தந்திருக்கிறேன். படித்து முடித்த பின்னர் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் கருத்துக்களை கூறுங்கள்...
ஹக்கிங் ஓர் அறிமுகம்.
ஹக்கிங் என்பதை இதுதான் ஹக்கிங் என்று வரையறுத்துக் கூற முடியாது. பொதுவாக அனுமதியில்லாமல் நடைபெறும் தரவு கையாடல் அல்லது தரவு திருட்டு ஹக்கிங் என்று கூறலாம். ஹக்கிங்கில் பல வகைகள் காணப்படுகிறது. உதாரணமாக இணையத்தள திருட்டு, மென்பொருள் திருட்டு, வலையமைப்பு திருட்டு என்று பல வகைகள் இருந்தாலும் அனைத்திற்கும் பொதுவான காரணம் தரவு அல்லது தகவல் திருடுவது தான். சில நேரங்களில் பழிவாங்கும் நோக்கங்களுடனும் பதிலடி கொடுப்பதற்காகவும் கூட ஹக்கிங் செய்யப்படுகிறது. ஒரு சிலர் பொழுது போக்காகவும் இதனை செய்வார்கள். உதாரணத்திற்கு ஜெயா தொலைக்காட்சி, அஇஅதிமுக இணையத்தளங்களை முடக்கிய ஹக்கர்களிடம் கேட்டதற்கு அவர்கள் சும்மா பொழுது போக்கா தான் இவற்றை ஹக் செய்ததாக  கூறினார்கள். இது தெரியாம தான் ஈஸ்வரன் என்று ஒருத்தரை கைது பண்ணியிருக்காங்க நம்ம இந்தியன் போலிஸ்காரர்ஸ். அது பற்றி இறுதியில் கூறுகிறேன். ஹக்கிங் பற்றி இந்த அடிப்படை போதும் என்று நினைக்கின்றேன். இனி ஹக்கர்ஸ் பற்றி பார்க்கலாம். 
கொந்தர்கள் (ஹக்கேர்ஸ்) ஓர் அறிமுகம்  
இணைய உலகின் கதாநாயகர்களும் இவர்கள் தான் வில்லன்களும் இவர்கள் தான். இவர்கள் இல்லாமல் இணைய உலகின் பாதுகாப்பு இந்தளவுக்கு உயர்ந்திருக்காது. நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு பைரேட்(Pirate) மென்பொருட்களும் ஒரு ஹக்கரின் அல்லது ஒரு ஹக்கர் குழுவின் உழைப்பில் வெளியிடப்பட்டவையே. இவர்களில் பல வகையினர் இருந்தாலும் இன்றைய தொழில்நுட்ப சமூகம் இவர்களை இவர்களின் செயற்பாடுகள், நோக்கம் என்பவற்றின் அடிப்படையில் WHITE HAT HACKER, GREY HAT HACKER, BLACK HAT HACKERS என்று மூன்று வகைப்படுத்திப்பார்க்கிறது. இந்த மூன்று வகையினரைப்பற்றியும் தொடர்ந்து பார்ப்போம். 
 WHITE HAT HACKERS 
இணைய உலகின் கதாநாயகர்கள் இவர்கள் தான் எப்போதும் தங்கள் அறிவை நல்ல விதத்தில் மட்டுமே பயன்படுத்துபவர்கள். இவர்கள் தொழில்நுட்ப உலகில் உங்களுக்கு ஏற்படும் ஆபத்துக்களில் இருந்து உங்களை பாதுகாப்பதற்காக தங்களை அர்பணித்துக்கொண்டவர்கள். இவர்களை தொழில்நுட்ப உலகின் போராளிகள் என்று கூறினால் கூட மிகையாகாது. தினம் தினம் புதிது புதிதாக கிளம்பும் நச்சு நிரல்களின் தாக்குதல்களில் இருந்து எம்மை பாதுகாப்பதற்காக போராடுபவர்கள். அதனால் தான் இவர்களை போராளிகள் என்று கூறினேன். பெரும்பாலும் பெரிய பெரிய anti virus software கம்பனிகளில் வேலை பார்ப்பவர்கள். இவர்களின் உதவியால் தான் இன்று எமக்கு நச்சு நிரல் தடுப்பிகள் கிடைக்கின்றன. நீங்களும் ஒரு WHITE HAT HACKER ஆகலாம். அதற்கான உதவியை eccouncil.org தளம் வழங்குகின்றது. மேலதிக தகவல்களுக்கு இங்கே சொடுக்குங்கள்.
 GREY HAT HACKER
இவர்கள் அந்நியன் படத்தில் வருகின்ற விக்ரம் மாதிரியானவர்கள். நல்லவர்களா தான் இருப்பார்கள் திடீர் என்று கெட்டவர்களாக மாறிவிடுவார்கள். மேலே சொன்னது போல பொழுதுபோக்காக ஹக்கிங் செய்பவர்கள் இவர்கள் தான். காலையில் பள்ளி, கல்லூரி, அலுவலகம் இரவில் ஹக்கிங். இதனால் இவர்கள் ஆபத்துக் குறைந்தவர்கள் என்று நீங்கள் கருதினால் அதற்கு நான் பொறுப்பில்லை. திடீர் தாக்குதல்களால் நிலைகுலையைச் செய்யக்கூடியவர்கள். இவர்களை விட பயங்கரமானவர்களைப் பற்றி தான் அடுத்ததாக பார்க்க போகிறோம். மேலதிக தகவல் - இவர்கள் பெரும்பாலும் பணத்தை எதிர்ப்பார்த்து ஹக் செய்வதில்லை. என் நண்பர்கள் வட்டத்தில் பலர் இந்த வகையினர் தான் :)
 BLACK HAT HACKERS
 WHITE HAT HACKERS இணைய உலகின் கதாநாயகர்கள் எனில் இவர்கள் தான் அவர்களுக்கு அவர்களுக்கு வில்லன்கள். WHITE HAT HACKERS எட்டு அடி பாய்ந்தால் இவர்கள் பதினாறு அடி பாய்வார்கள். WHITE HAT HACKERS க்கு தலைவலியே இவர்கள் தான். இவர்களுக்கு இருக்கும் அறிவினை நல்லவற்றிற்கு பயன்படுத்துவது என்பது அத்தி பூத்தாற் போல் தான் எப்போதாவது ஒரு மூட் வந்தால் மட்டும் பயன்படுத்துவார்கள். நூறில் என்பது வீதமான ஹக்கிங் இவர்களாலேயே செய்யப்படுகிறது. சில வேளைகளில் குழுவாக இணைந்தும் தாக்குதல் நடத்துவார்கள். இவர்களின் முக்கிய நோக்கம் ஹக்கிங் மூலம் பணத்தை சம்பாதிப்பதே. இதற்காக இவர்கள் பெரிய நிறுவங்களின் இணையத்தளங்களை ஊடுருவி அதில் இருக்கும் தரவுகளை திருடி அதன் மூலம் அவர்களிடமிருந்து சில இலட்சங்கள் முதல் கோடிகள் வரை அபகரிப்பதே. சிலர் அந்த தரவுகளை வெளியிட்டு அந்த நிறுவனத்திற்கு நட்டத்தையும் விளைவிப்பார்கள். சில நிறுவனங்கள் தமது போட்டி நிறுவனத்திற்கு நட்டத்தை விளைவிப்பதற்காகவே இது போன்ற BLACK HAT HACKER களை சம்பளம் கொடுத்து வேலையில் வைத்திருப்பார்கள்.  
இவர்களை தவிர வேறு சில ஹக்கர்களும் இருக்கிறார்கள். ஆனாலும் இந்த மூன்று வகையினரும் தான் மிக முக்கியமானவர்கள். அதனால் அவர்கள் யார் என்று தெரிந்து வைத்துக்கொள்வதற்காக மட்டும் அவர்களை குறிப்பிடுகிறேன்.
  • Script Kiddies
  • Intermediate Hackers
  • Hackers
  • Suicide Hackers
மேலே சொன்னது போல ஜெயா டிவி இணையத்தளத்தை முடக்கியது ஈஸ்வரன் கிடையாது. பாகிஸ்தான் ஹக்கர்ஸ் முடக்கிய தளத்தை திரும்ப மீட்க முயன்றவர் தான் ஈஸ்வரன் என்பது கூடுதல் தகவல். இந்த பதிவின் மூலம் உங்களுக்கு ஹக்கிங் மற்றும் ஹக்கர்ஸ் பற்றிய ஓர் அறிவு வந்திருக்கும் என்று நினைக்கின்றேன். ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.