குறிப்பு: நண்பர்களே, நாம் இங்கு வழங்கும் விடயங்கள் மற்றும் நிரலிகள் அனைத்தும் கல்வி நோக்கத்திற்காகவே. தகவல் திருட்டு ஒரு பாரிய குற்றம். சிந்தித்து செயற்படுங்கள்.

இணையத்தில் அநாமதேயமாக உலாவுதல்

இணையத்தில் அநாமதேயமாக உலாவுதல் என்ற தலைப்பை பார்த்தவுடன் நீங்கள் குழம்பியிருப்பீர்கள். அது பற்றி முழுவதுமாக அறிய தொடர்ந்து படியுங்கள். நீங்கள் பயன்படுத்தும் கணினி ஒரு வலையமைப்பு அல்லது இணையத்துடன் இணைந்திருந்தால் சந்தேகமேயின்றி உங்களை யாராவது ஒருவர் கண்காணித்துக்கொண்டே தான் இருப்பார். கண்காணிப்பவர் தனி நபராக இருக்கலாம் அல்லது குழுவாக கூட இருக்கலாம். எப்படி உங்களை கண்காணிக்கிறார்கள் என்று அறிந்துகொள்ளுங்கள்.

உங்கள் வலையத்தின் தனித்தன்மை வாய்த்த IP முகவரி மூலமாகத்தான். நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு தளத்துக்கும் தனிதனி முகவரிகள் இருக்கிறது. நீங்கள் ஒரு தளத்தின் பெயரை கொடுக்கும் போது அந்த தளத்தின் முகவரியானது (எ.கா google.com) Domain Name System ன் உதவியால் தனித்தன்மை வாய்த்த எண் முறைக்கு மாற்றப்பட்டு[74.125.236.83] Serverக்கு Request செல்கிறது. Service Provider உங்களுடைய Request ஐ ஏற்று உங்களுக்கு அந்த தளத்தின் பக்கத்தை காட்டுகிறது. இந்த செயலை தான் Three Way HandShake என்பார்கள்.

நீங்கள் ஒவ்வொருமுறை தள முகவரியையோ அல்லது தொடர்பையோ சொடுக்கும்போது இவை நிகழ்கிறது. சில தளங்கள் வராமல் இருப்பதற்கான காரணம் server இடம் இருந்து பதில் வராததே.

இதில் நீங்கள் எப்படி கவனிக்கப்படுகிறீர்கள் என்றால் நீங்கள் request அனுப்பும் தளமானது உங்கள் IP Address ஐ சேமித்து வைத்துக்கொண்டு உங்கள் நடவடிக்கையும் தன்னிச்சையாக சேமிக்குமாறு நிரல் எழுதப்பட்டு இருக்கும்.

உதாரணமாக நாம் கூகுளில் தேடும் விசயங்களையும் Google ஆராய்ந்து பார்க்கும். நேற்று நீங்கள் புத்தகங்கள் பற்றி தேடலில் ஈடுபட்டு, இன்று ஒரு பிரபலத்தின் பெயரை தேட முயன்றால் அந்த பிரபலத்தை பற்றிய புத்தகங்களை உங்கள் தேடலில் காண்பிக்கும். இது தான் கண்காணிப்பது.

இவற்றை விட முக்கியமானது நீங்கள் ஒரு தளத்தை ஹக் செய்து விட்டீர்கள். அந்த மகிழ்ச்சியில் உங்கள் IP முகவரியை மறைக்க மறந்திருந்தால் அடுத்தநாள் சைபர் கிரைம் போலீசார் உங்கள் வீட்டுக் கதவைத்தட்டுவார்கள். ஆகவே ஹேக்கிங் பற்றி அறியும் முன் உங்கள் IP முகவரியை மறைக்க வேண்டியது கடமையாக இருக்கிறது. அதை கற்றுகொண்ட பிறகு மற்றவற்றை பார்க்கலாம்.

VPN -  Virtual Private Network இது உங்களுடைய முகவரியை மறைத்து புதிய முகவரியில் நீங்கள் இருப்பதாக உலகத்துக்கு காட்டும். இதற்காக நீங்கள் நிறைய சிந்திக்க வேண்டியதில்லை. இணையத்தில் இதற்கான வழிகள் நிறைய இருந்தாலும் இலகுவானதாக Hotspot Shield விளங்குகின்றது. இதனை உங்கள் கணினியில் நிறுவி RUN பண்ண விட்டாலே போதும். தரவிறக்க இங்கே சொடுக்குங்கள். 

தரவிறக்கிய பின் உங்கள் கணினியில் நிறுவுவதற்கு முன்  உங்கள் IP முகவரியை இங்கே சொடுக்கி அறிந்து கொள்ளுங்கள். நிறுவிய பின்னரும் உங்கள் IP முகவரியை பரிசோதித்துக் கொள்ள மறக்காதீர்கள்.

IP யை மறக்கும் கலையை கற்றுக்கொள்ளுங்கள். அடுத்த கட்டத்துக்கு போக தயாராய் இருங்கள்...  ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். 

Post a Comment